தெலுங்கானா மாநிலம் தலைநகரான ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது, மேயரை வென்றெடுக்க தேவையான இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை மாறாக கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன அதன் படி தெலுங்கானா ராஷ்டிரிய சமதி 55 இடங்களிலும் பாஜக 48 இடங்களிலும், AIMIM 43 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு மட்டும் தற்போதுவரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
கடந்த முறை 99 இடங்களை பெற்ற TRS கட்சி இந்தமுறை 57 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது, முடிவுகள் அருவிக்கப்படாத இரண்டு இடங்களில் வெற்றி பெற்றால் 59 இடங்கள் என அதிகபட்ச எண்ணிக்கையை பெரும் ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 76 இடங்களை அந்த கட்சியால் பெறமுடியவில்லை, ஆனால் பாஜக அபார வெற்றிபெற்றுள்ளது, கடந்த முறை 4 இடங்களில் இருந்த கட்சி இப்போது 48 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது நிலுவையில் உள்ள இரண்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால் அதன் கணக்கு 50 ஆகும்.
தற்போது ஆளும் கட்சியான TRS கட்சியின் அலுவலகம் எந்த வித கொண்டாட்டங்கள் இன்றி காணப்படுகிறது மாறாக பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் தலைவர்கள் திரண்டு உற்சாகமாக கொண்டாடுவதில் இருந்தே யார் ஹைதராபாத் தேர்தலில் வெற்றி பெற்றது என புரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு உள்துறை அமைச்சர் அமிட்ஷா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார், விரைவில் இந்த வெற்றியை கொண்டாடவும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல பாஜக தேசிய தலைவர்கள் ஹைதராபாத் வர இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TRS கட்சி தரப்பிலோ ஒவைசியின் AIMIM கட்சியுடன் கூட்டணி வைத்து மேயர் பதவியை கைப்பற்றினால் மாநில அளவில் இந்துக்களுக்கு எதிரான கட்சி TRS என பிம்பம் உண்டாகிவிடும் என கணக்கு போட்டு அமைதியாக இருக்கிறாராம், ஒரு வேலை TRS மற்றும் AIMIM இரண்டும் கூட்டணி வைத்தால் அடுத்து 2023 ம் ஆண்டு வரக்கூடிய சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக எளிதில் வெல்லும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.