10மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது தெரியுமா?

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னரே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான பாட திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வில் மாணவர்களும் , பெற்றோர்களும் விரும்பும் வகையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, தமிழகத்தில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னரே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.