ஐபிஎல் 2020 நேற்று துவங்கியது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். டோனி 100 போட்டிகளை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்று நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அதில் சென்னை சூப்பர் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பின்பு களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று சென்னை அணி வெற்றி பெற்ற போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். டோனி 100 போட்டிகளை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.