11ம் வகுப்பு மாணவி தற்கொலை!

Filed under: சென்னை |

11ம் வகுப்பு படிக்கும் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆசிரியர் கொடுத்த பள்ளி பாடங்களை சரியாகப் படிக்கவில்லை என்பதால், அவரை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி, தன் வீட்டிற்குப் பள்ளிக்குச் செல்வதுபோல் கிளம்பி பின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வந்து, துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மாணவி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியை அடைந்தனர். பின்னர், போலிசில் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.