2 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு !

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தை அனைவரும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியாவின் சுட்டுரையை மேற்கோள்காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:

‘‘மிகச் சிறப்பு! நன்றாக செயல்பட்டுள்ளீர்கள்.. என் இளம் நண்பர்களே.

இந்த வேகத்தை நாம் தொடர்வோம்.

கொவிட்-19 தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரையும் வலியுறுத்துகிறேன்.’’