தமிழகத்தில் விரைவில் 3 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார். இதை தவிர மேலும் சில அறிக்கைகளும் வெளியிட்டுள்ளார்.
காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயமாக கடைப்பிடிக்கப்படும். திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவில் ஆளுநர்களுக்கு 5% சிறப்பு சம்பளம் வழங்கப்படும். காவலர்களுக்கான நல மேம்பாட்டிற்க்காக மகிழ்ச்சி என்ற செயல்திட்டம் ரூ.53 லட்சத்தில் செயல்படுத்தப்படும். எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படக்கூடிய சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
அரசுக்கு நெருக்கடி உண்டாக்கும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டு பேசினார்.