30 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் தியேட்டர்கள் திறப்பு!

Filed under: உலகம் |

30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் திரையரங்குகளை திறக்க ஜம்மு-காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று ஜம்மு காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திறந்து வைக்கப்பட்டன. இந்த திரையரங்குகளை ஜம்மு -காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருவதாகவும், குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டரில் படத்தை கண்டு களித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது என்று அரசு கூறியுள்ளது.