31-ம் ஆண்டு நினைவு நாள்: அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும், திமுக மூத்த முன்னோடியும் , முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின்
31 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும ன அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன்,முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னைஅரங்கநாதன் ,சேகரன் சபியுல்லா கோவிந்தராஜன் குணசேகரன் மாமன்ற உறுப்பினர் செந்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் , கொட்டப்பட்டு தர்மராஜ், மோகன்,
ஏ. எம்.ஜி.விஜயகுமார் ராஜ்முஹம்மது மணிவேல் பாபு சிவக்குமார் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர்.