6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை

Filed under: Uncategory |

6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ப்ரீஸா காா் விற்பனை 5 ஆண்டுகளில் 6 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) சஷாங் ஸ்ரீவஸ்தவா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாருதி ப்ரீஸா காா் கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அறிமுகமான ஐந்தே ஆண்டுகளில் அதன் விற்பனை 6 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. நிறுவனத்தின் தலைமைத்துவத்தை தக்க வைக்கவும், எஸ்யுவி பிரிவில் சிறந்த விற்பனையாகும் மாடலாகவும் ப்ரீஸா விளங்குகிறது என்று அந்த அறிக்கையில் சஷாங் தெரிவித்துள்ளாா்.

ப்ரீஸா மாடலின் 1.5 லிட்டா் பெட்ரோல் என்ஜின், 5 வேக மேனுவல், 4-வேக ஆட்டோமேட்டிக் கியா் வசதிகளை உள்ளடக்கியது.