80 தொகுதிகளிலும் பாஜக இலக்கு!

Filed under: அரசியல்,இந்தியா |

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளிலும், பாஜக வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒட்டுமொத்த 80 தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் பூபிந்தர் சிங் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அணிவகுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த தேர்தலில் பாஜக 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை மொத்த தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.