டிஎன்பிஎஸ்சி குரூப் குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் தேர்வு எழுத அனுமதி கிடையாது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கு 9 மணிக்குள் தான் தேர்வு எழுதுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுதுபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இந்த தேர்வை எழுத 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண்கள் 4.96 லட்சம் பேர்கள், பெண்கள் 6.56 லட்சம் பேரும், மூன்றாம் பாலினத்தவர் 48 பேரும் தேர்வெழுத உள்ளனர்.
இத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.