இன்று இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் என்ற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சுமார் 247 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், 19 சிறப்பு பிரிவுகள், 17 தனிச்சிறப்புப் பிரிவுகள், 64 தீவிர சிகிச்சைப் பிரிவுகள், 750 படுக்கைகள், மருத்துவ சிகிச்சை அரங்குகள் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.