சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளிவந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் வெடிகுண்டு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில் இச்சம்பவத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னையிலுள்ள 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 18 பேரின் இருக்கும் ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் சனிக்கிழமை சென்னை வந்தடையும் - பா.ஜ.க தலைவர...
நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல்!
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-ஆவது ஆண்டு விழாவை தமிழக அரசு சார்பில் ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும்!
திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!



