பள்ளி மாணவிகள் சேர்ந்து தலைமை ஆசிரியரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இது ஒரு தகவல் தெரிந்தவுடன் சக மாணவிகள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரை கயிற்றால் கட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
அசாம் மாநிலத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி!
கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் புதிய மாற்றம் ஏற்படும் - பிரதமர் மோடி!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளுக்கும், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளுக்கும் பிரதமர் மோடி மரியாதை!
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா!



