முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளவதை குறித்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், “திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை உண்டாக செய்துவிட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புதமான வரலாறு நமக்கு பெருமையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும்’ என பேசியிருந்தார். இன்று இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக்கூடாது. இவ்வாறான வரலாற்று திரிபுகள்தான் நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்தாகும். அறிவியல் பார்வையை உருவாக்குவதுதான் இன்றைய காலத்தின் தேவை. பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
Related posts:
கள்ளக்குறிச்சி மாணவிகள் தற்கொலை விவகாரம்: தனியார் சித்த மருத்துவக் கல்லூரிக்கு சீல் !
அடுத்த மூன்று நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும்... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
திருச்சியில் இன்று பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டம் : தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ள ஸ்டாலின்!



