இந்தியளவில் கமல்ஹாசன் டிவீட் டிரெண்டிங்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில் அவ்வப்போது கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்என்.ரவி பேசுவது கடும் விமர்சனர்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி “மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை “தமிழகம்” என்று அழைப்பதே சரியாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் பேச்சுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஆளுங்கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா தமிழ் நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள் என்று தொண்டர்களிடம் கூறியிருந்தார். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், “மகாராஷ்டிரம் என்றால் என்ன? இந்தியாவை விட பெரிய நாடு என்று பொருள். மகாராஷ்டிரத்தின் பெயரை முதலில் மாற்றச் சொல்லுங்கள். பிறகு தமிழ்நாட்டிற்கு வரலாம்’’என்று தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில், “#தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்- மொழியியல்- அரசியல்- பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ்நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்!” என்று பதிவிட்டிருந்தார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ் நாடு வாழ்க என்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் பதிவிட்டுள்ளார். இதுவைரலாகி வருகிறது. தற்போது #தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது.