பாஜக கூட்டத்தில் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருவல்லிக்கேணியில் கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன் என்பவர் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என்றோம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதால் தமிழக அரசே எச்சரிக்கிறேன் என்றும் பேசியிருந்தார். இதையடுத்து ராணுவ அதிகாரி பாண்டியன் மீது திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.