காதல் பிரச்னையால் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவரது, மகள் தரணி (19 வயது). அங்குள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார். தரணி தன் வீட்டிலிருந்த தோட்டத்த்ல் இருந்தபோது, தோட்டத்தில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் தரணியைப் பிடித்து, அவரது கழுத்தறுத்துவிட்டு, தப்பியோடிவிட்டார். தரணியின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கே ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தரணியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், கணேஷ் (25) இளைஞரை தரணி காதலித்து வந்ததாகவும், கணேஷ் கஞ்சாவுக்கு அடிமையானதால், அவரிடம் பேச தரணி மறுத்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, கணேஷ், தரணியைக் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.