டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டமும் தெரிவித்தனர். ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் அக்கடையில் ரூ.260 மதிப்புள்ள மது வாங்கியபோது, விற்பனையாளர் ரூ.265க்கு ரசீது கொடுத்துள்ளார். மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விஜயகுமார் வாட்ஸ் ஆப் மூலம் புகாரளித்திருந்தார். இதையடுத்து, தற்போது விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம்
ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகளில் ஈ.வி.கே.எஸ். வெற்றி!
திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர...
கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு ம...


