ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்து உரிமையாளர் பேட்டி

Filed under: தமிழகம் |

இன்று காலை கோவையில் உள்ள தனியார் பேருந்தில் ஷர்மிளா பெண் டிரைவராக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அப்பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தார்.

கனிமொழி ஓட்டுநர் ஷர்மிளா உள்ளிட்ட அப்பேருந்தில் பயணித்த பலரிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து ஓட்டுனர் ஷார்மிளாவுக்கும் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஷர்மிளா பேட்டியளித்த போது “என் மேல் எந்த தவறும் இல்லை, கனிமொழி வருவதை ஏற்கனவே நான் நிர்வாகத்திடம் கூறி இருந்தேன்” என்று அவர் தெரிவித்தார். பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு அளித்த பேட்டியில், “நான் ஷர்மிளாவை வேலை நீக்கம் செய்யவில்லை. அவரே தான் ராஜினாமா செய்து விட்டு போய்விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.