காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்தியாவில் மின் கட்டண உயர்வுக்கு அதானியே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று டில்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், “இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்தோனேசியாவில் அதானி குழுமம் வாங்கும் நிலக்கரியின் விலை நடுக்கடலில் திடீரென இரண்டு மடங்குகளாக உயர்வது எப்படி? இந்தியாவின் மின் கட்டண உயர்வுக்கு முழுக்க முழுக்க அதானியே காரணம்” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.