பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளது. இந்த கார் பந்தயத்தால் மக்களுக்கு பாதிப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி சென்னையில் நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 நடைபெறவுள்ளன. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மேலும், இப்போட்டிக்கான டிக்கெட்-ஐ இன்று அறிமுகம் செய்தோம். இச்சிறப்புக்குரிய போட்டிக்கான பாதுகாப்பு -அடிப்படை வசதிகள் மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் வெற்றியின் மூலம் புது வரலாறு படைத்திடுவோம்’’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த பார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கார் பந்தயத்திற்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கமளித்துள்ளது. எனவே வரும் 9,10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் இந்தியன் ரேசிங் சென்னையில் நடக்கவுள்ளதாக் ரசிகர்கள் இதைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.