தோனி ரசிகரிடம் கூறியதன் பின்னணி என்ன?

Filed under: விளையாட்டு |

தோனி இந்திய அணியில் 2004ம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார். தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007ம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். 2019ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர் இப்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இப்போது துபாயில் நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் தோனி உணவகம் ஒன்றில் ரசிகர் ஒருவரோடு பேசுவது போன்று அந்த வீடியோ உள்ளது. அதில் ரசிகரிடம் தோனி “நீங்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு சென்று பாருங்கள். அங்கு உணவு வகைகள் எல்லாம் மிகவும் அற்புதமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.