சமூக வலைதளங்களில் சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்ய வந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்தது.
இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வேலைக்கான பொருட்களுடன் மெட்ரோ ரயில் பயணம் செய்ய வந்த போது அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இச்செய்தியை அடுத்து மெட்ரோ நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில், “கட்டிட தொழிலாளர்கள் கூர்மையான பொருள்களுடன் வந்தார்கள். மெட்ரோ ரயிலில் கூர்மையான பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அவர்கள் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் கூர்மையான பொருள்களை துணி வைத்து மூடிய பின் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கமளித்துள்ளது.