திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்த தமிமுன் அன்சாரி!

Filed under: அரசியல்,தமிழகம் |

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியவுடன் அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்தவர். அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தான் வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

திடீரென மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரே கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவும் கிடைக்காமல் போய்விட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வரும் நிலையில் இம்முறை அதிமுக தனித்து விடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகான் தவிர வேற எந்த கட்சியும் இதுவரை கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை கூட நடத்தவில்லை. அதிமுக இம்முறை 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலைத்தமைதான் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.