கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் திமுகக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கூட்டணியிலிருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அளித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சியே இருக்காது. எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று ஈஸ்வரன் பேசியுள்ளார்.