இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக லண்டனிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் லண்டனில் வசித்து வந்தவர் தனது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சென்னை வந்துள்ளார். இன்று காலை அவர் வாக்குச்சாவடிக்கு சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிள்ளார். என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்றும் கடந்த முறை கூட வாக்களித்ததாகவும் ஆனால் இந்த முறை தனது வாக்கு இல்லை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறுவது துரதிஷ்டமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.