திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து : சென்னையைச் சேர்ந்த 2 பேர் சாவு, இருவர் காயம்.
சென்னை திருவள்ளூர், அம்பத்தூர் குமரன் தெருவை சேர்ந்த கணேஷ் பாபு அம்பத்தூர் விஜயலெட்சுமிபுரத்தை சேர்ந்த ரவி, சென்னை குறுக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன், சென்னை கம்பன் நகர் முதல் தெருவை சேர்ந்த மதன்குமார், ஆகிய 4 பேரும் ஒரு காரில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் புறப்பட்டனர். வியாழக் கிழமை பகலில் கார் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமாநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி காரிலிருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர், போலீஸôர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பாபு, ரவி இருவரும் உயிரிழந்தனர். பாலமுருகன், மதன்குமார் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மணிகண்டம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.