தேசிய தேர்வு முகமை தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் இன்றைய க்யூட்-யுஜி தேர்வு நடைபெறுகிறது. டில்லியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க க்யூட்-யுஜி தேர்வு கட்டாயம். இன்று காலை நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெற்றது. ஆனால் டில்லியில் மட்டும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று நடைபெற இருந்த வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான தேர்வு மே 29ம் தேதி டில்லியில் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் மே 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து பாடப்பிரிவுகளுக்கான பிரிவுகளும் வழக்கம்போல் நடைபெறும். கடந்த 2022ம் ஆண்டு முதல் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் யூஜி படிப்பு சேர க்யூட்-யுஜி தேர்வு நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. க்யூட்-யுஜி தேர்வு இன்று நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் நடைபெற்று வருகிறது.