மாநகராட்சியிடம் நாய் வளர்ப்பவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
நாய் பொதுமக்களை கடித்தால் நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாய்கள் மட்டுமின்றி மாடுகள் முட்டியும் பலர் காயமடைவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மாடுகள் வளர்க்கவும் லைசன்ஸ் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி விரைவில் உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது. மாடுகள் வளர்ப்பவர்கள் அதை சாலைகளில் மேய விடுவதால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதியில் ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்வோர் வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும் இடைஞ்சலாக கால்நடைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுகிறது. இதையடுத்து மாடுகள் வளர்ப்பவர்களும் லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்ற நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.