மூடநம்பிக்கையால் குழந்தையை கொன்ற தாத்தா!

Filed under: தமிழகம் |

தாத்தாவே மூட நம்பிக்கை காரணமாக பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை கொன்றுள்ளார்.

மக்கள் மத்தியில் மூடநம்பிக்கை இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது கூட நல்ல நேரம் பார்த்துதான் பிரசவம் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் தாத்தா வீரமுத்து. குழந்தை பிறந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை சித்திரை மாதம் பிறந்ததால் உயிருக்கு ஆபத்து என்றும், கடன் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் யாரோ சொன்னதை நம்பிய வீரமுத்து, 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு முக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் குழந்தை தண்ணீர் பேரலில் தவறி விழுந்ததாக நாடகம் ஆடியுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரமுத்துவை கைது செய்துள்ளனர்.