எம்.எஸ் டோனி கோபமடைந்து இரண்டு முறை பார்த்துள்ளேன் – முன்னாள் அதிரடி ஆட்டக்காரர்!

Filed under: விளையாட்டு |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி பற்றி சமீபகாலமாக பல கிரிக்கெட் வீரர்கள் அவளுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் டோனியை பற்றி அவருடைய அனுபவத்தை கூறியுள்ளார்.

இந்திய அணி எம்.எஸ் டோனியின் தலைமையில் 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும் மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பையும் வெற்றி பெற்றுள்ளது. சில சமயங்களில் கோபமாக இருந்தாலும் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடுகையில் எம்.எஸ் டோனி கேப்டன் கூல் தான்.

இதனிடையே டோனி கோபமடைந்து இரண்டு முறை பார்த்துள்ளேன் என கம்பிர் கூறினார். அதை பற்றி அவர் கூறியது: பொதுவாகவே அனைவரும் டோனியை கேப்டன் கூல் என அழைப்பார்கள். எந்த நேரத்திலும் அவர் பொறுமையை இழக்க மாட்டார் மற்றும் வீரர்களை கடுமையாக பேசமாட்டார். 2007 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சில சமயத்தில் நாங்கள் சரியாக விளையாடாத போது கோபம் அடைந்துள்ளார்.

அவரும் மனிதர் தானே அவருக்கும் கோபம் வரும் தானே. கோபம் அடைய அவருக்கு உரிமை இருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளின் போதும் சரியாக பீல்டிங் செய்யாதவர்களின் மீது கோபப்பட்டு உள்ளார். ஆனால் டோனி மற்ற உலக கிரிக்கெட் கேப்டன்களுடன் ஒப்பிடும் போது அமைதியானவர் மற்றும் நிதானமானவர். அவர் எப்போதும் கேப்டன் கூல் தான்.

இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.