இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துறைகளில் சிறப்பாக விளையாடும் இந்திய நட்சத்திரங்களுக்கு வருடா வருடம் மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது வழங்கப்படும்.
தற்போது பி.சி.சி.ஐ சார்பில் விளையாட்டில் மிகப்பெரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 5 சதம் உள்பட 648 ரன்கள் அடித்து உள்ளார்.
இதனால் உலக கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டி20 போட்டியில் 4 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். டோனி, விராட் கோலி ஆகியோர் கேல் ரத்னா விருதை வெற்றி பெற்றுள்ளனர்.