இந்தியா-சீனா இடையே எற்பட்ட தாக்குதலில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தற்கு அமெரிக்கா ஜெர்மனி நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ட்விட்டரில் பதிவிட்டது: கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீர்களின் துணிச்சலும் மற்றும் தைரியமும் மறக்கமுடியாது எப்போதும் நினைவில் இருக்கும். அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை அமெரிக்க தூதரகம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கென்னத் ஜஸ்டர் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ. லின்டர் கூறியது: கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையான மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.