சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியது: கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளும் மற்றும் உயிரிழப்பவர்களின் விகிதத்தை குறைப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் ஒளிவு இல்லாமல் தெரிவிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகமாக செய்தாலும், பாதிப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னையில் 65 சதவீதம் பேர் தான் முககவசம் அணிகிறார்கள். மீதி இருக்கும் 35 சதவீதம் பேரும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என கூறினார்.
மேலும், போது இடங்களில் 22 சதவீத மக்கள் தான் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்கள். சென்னை மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என தெரிவித்தார்.