கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ்,அல்கொய்தா, பயங்கரவாதிகள் பற்றியும் மற்றும் தடை பற்றியும் 26-வது அறிக்கை வெளியாகியது, அதில் கூறியது: தாலிபான் கீழ் இந்திய துணை கண்டத்தில் அல்கொய்தா நடமாடுவதாகவும் இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற ஆசிய துணைக் கண்ட நாட்டில் 150 முதல் 200 அல் கொய்தா தீவிரவாதிகள் இந்த நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா தலைவர் ஒசாமா முகமது நடமாடுவதாகவும், முன்னாள் தலைவர் ஆசிம் உமரின் படுகொலைக்காக பதில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் விலயா ஆப் ஹிந்தில் 180 முதல் 200 பேர் உள்ளதாகவும், அதிகமான தீவிரவாதிகள் கர்நாடக, கேரளா மாநிலத்தில் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.