டிவி சீரியல்களில் நடித்து பின்பு பிக்பாஸ் சீசன் 3 யில் மிகவும் பிரபலமானார் கவின். இவர் தற்போது லிப்ட் என்கிற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாதம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி இணைந்துள்ளார்.
இதனைப்பற்றி காயத்ரி ரெட்டி கூறியது: இந்த படம் பல சிறப்பான விஷயங்களை ஏற்படுத்தும். நான் காயத்ரி என்பதை மறந்து விட்டு கதாபாத்திரமாகவே மாறி விடுவேன். இந்த இடத்தில் பல இடங்களில் என்னுடைய நடிப்பு எமோஷனலாக இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையில் இந்த படம் சிறப்பான லிப்ட் ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார்.