இன்று சென்னை தரமணியில் பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்-னை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
இதன் பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; செப்டம்பர் 10ஆம் தேதி சான்றிதழ் சரி பார்க்கும் பணிகள் முடிவடையும் எனவும் செப்டம்பர் 17ஆம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணத்தினால் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்படாது என தெரிவித்தார்.
கட்டணம் செலுத்திவிட்டு அரியர் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களும் அனைவரும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் என தெரிவித்தார்.