மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 253 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிராவில் 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸை எதிர்த்து களத்தில் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 253 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதுவரை 21,827 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 234 பேர் உயிரிழந்துள்ளனர், 3,435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் 18,158 காவலர்கள் குணம் அடைந்துள்ளனர்.