லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா சீனா இடையே ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்தியா ராணுவ வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 15ஆம் தேதி சீனா அத்துமீறிய போது இரு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் கூறப்பட்டது.
தற்போது வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களை நினைவு கூரும் விதமாக அவர்களுக்கு லடாக்கின் டர்பக்-சியோக் தெளலத் பெக் ஓல்டி பகுதியில் நினைவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீரர்களின் பெயர்களும், விவரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.