7 பேர் விடுதலை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை…முதல்வர் பழனிசாமி பாய்ச்சல்

Filed under: Uncategory,அரசியல்,தமிழகம் |

திருப்பூர் மாவட்டத்தில்,ரூபாய் 31 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு, அடிக்கலும் நாட்டினார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். இதை தொடர்ந்து, விவசாயிகளுடனும் , தொழில்துறை பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார். 

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரசின் நல்ல நடவடிக்கைகளால், வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் வர ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டார். மேலும், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள், 44 சதவீதம் நிறைவடைந்துவிட்டன என்று கூறிய முதல்வர், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேச, ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.