தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சென்னை கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.6,078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்க உள்ளது.
நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இந்த திட்டத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 23 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.
அதேபோல் திருவாரூர், திருச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நெல்லை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரண்டாயிரத்து 327 கோடியில் ஆறு கூட்டு குடிநீர் திட்டங்களும் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.