பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல் பெங்களூர் அணியும் 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது.
இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதல் இடம் அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டுகள் எடுத்து ஐந்து சிறப்பான விக்கெட் கீப்பர்கள்!
எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்...விராட் விளக்கம்
ஐ.பி.எல் போட்டியில் 100 கேட்ச்களை பிடித்து டோனி சாதனை - குஷியில் ரசிகர்கள்!
இந்தியாவிற்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது நியூசிலாந்து



