வருகின்ற ஜூன் 26-ம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “ஒரு சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது, மேலும் ஜூன் 26ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு ஜூலை 2ம் தேதி நடத்தப்படும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மனநிம்மதி அடைந்துள்ளனர்.