உலகம் முழுவதும் கொகரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை செய்து வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவில் இருக்கும் பகுதிகளை அடையாளம் காண்பித்து கொடுக்கும் இந்திய அரசின் “ஆரோக்கிய சேது” செயலி உதவியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டியுள்ளார்.
மக்கள் சுற்றியிருக்கும் பகுதிகள் மற்றும் யாருக்காவது கொரோனா தொற்று உள்ளதா என்பதை இந்த செயலி காண்பித்து கொடுக்கும். இந்த செயலியை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த செயலியை 15 கோடிக்கும் மேலான பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதில் ஹாட்ஸ்பாட் பகுதிகளை தெரிந்து கொள்ளவும் மற்றும் சுகாதாரத் துறைக்கு உதவியாகவும் இருப்பதாகவும் உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார்.