பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடத்தி வழக்கில் இதுவரை 101 பேரை கைது சிபிசிஐடி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தால் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
இந்தத் திட்டத்தில், தமிழ்நாட்டில் விவசாயிகள் இல்லாத பலர் போலியாக அட்டைகளை இணைத்தாகவும் மற்றும் 6 லட்சம் பேர் வரை இணைக்கப்பட்டதாகவும் இதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இதனை விசாரணை செய்த சிபிசிஐடி அதிகாரிகள், அரசுத்துறையை சார்ந்த 100 மேற்பட்ட ஊழியர்களை பணி இடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.