கொரோனாவில் இருந்து குணமடைந்த நடிகை ஜெனிலியா – அனுபவத்தை ட்விட்டரில் பதிவு!

Filed under: சினிமா |

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இன்னும் அடங்காத நிலையில் தான் உள்ளது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பொது மக்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவால் அமிதாப்பச்சன் குடும்ப உறுப்பினர்கள், இயக்குனர் ராஜமவுலியின் குடும்ப உறுப்பினர்கள் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகை நிக்கி கல்ராணி உள்பட பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழில் பல படங்களில் நடித்து விட்டு ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை ஜெனிலியா கல்யாணம் செய்து கொண்டார். ஜெனிலியா அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிக்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளார்.

இந்த கொரோனா அனுபவத்தை பற்றி அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; நான் மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதனால், கடந்த 21 நாட்களாக நான் தனிமையில் இருந்தேன். கடவுளின் கிருபையால் நான் இன்று கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இந்த 21 நாட்கள் தனிமையில் இருப்பது எனக்கு மிகவும் சவாலானது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். எனது குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் திரும்பி இணைந்த்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அன்போடு உங்களைச் சுற்றி வையுங்கள். அதுதான் உண்மையான பலம், இது அனைவருக்கும் தேவை. உடற்பயிற்சி செய்யுங்கள், ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், இதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி.

இவ்வாறு ஜெனிலியா பதிவிட்டுள்ளார்.