பாகிஸ்தானுக்கு உதவி செய்ய ஜெர்மனி மறுப்பு – அதிகரிக்கும் எதிர்ப்பு!

Filed under: உலகம் |

நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த பாகிஸ்தான் கேட்ட தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கு ஜெர்மனி மறுப்பு தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிக்கப்பல் நீர்மட்டத்தில் தெரியாத அளவு தண்ணீருக்குள் வந்தாலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கடல் பரப்புக்கு வர வேண்டும்.

ஆனால், Air Independent Propulsion என்கிற தொழில்நுட்பத்தை கொண்டு வாரக்கணக்கில் நீர்மூழ்கி கப்பல்கள் கடல் பரப்புக்கு மேல் கப்பல் வருவதை தடுக்க முடியும் . இதன் மூலம் பல வாரத்துக்கு தண்ணீருக்குள் மறைந்து தாக்கவும் மற்றும் தப்பிவிடவும் முடியும்.

இதனிடையே இந்த தொழில்நுட்பம் உபயோகப்படுத்தி பாகிஸ்தானின் நீர்மூழ்கிக்கப்பலை வலுப்படுத்தும் எண்ணத்தில், பாகிஸ்தான் ஜெர்மனி நாட்டின் உதவியை கேட்டுள்ளது. ஆனால், ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான பாதுகாப்புக்குழு பாகிஸ்தான் நாட்டுக்கு உதவி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜெர்மன் தூதரகத்தில் குண்டு வைத்தவர்களை பாகிஸ்தான் தண்டிக்காமல் விட்டதால், இந்த உதவியை மறுத்துள்ளது என தகவல் கூறப்படுகிறது.