இந்தியா சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்து மகாசபா தலைவருமான மறைந்த வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதனை குறித்து மோடி ட்விட்டரில் கூறியது: வீர சாவர்க்கர் பிறந்த தினத்தில் அவருடைய தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் தலை வணங்குகிறேன். அவருடைய துணிச்சல் மற்றும் பலரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அவர் கொடுத்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவரை நாம் நினைவு கொள்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மேலும், அவரின் சாதனையை பற்றி ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.