’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளோர் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான திரு.ரவிச்சந்திரன் அஸ்வின், சத்குருவுடன் ’ஆன்லைன்’ வழியாக கிரிக்கெட், கரோனோ, காவேரி என்னும் தலைப்பில் கலந்துரையாடினார். அப்போது அவர் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சார்ந்த கேள்விகளுடன் விவசாயிகளின் […]
Continue reading …சென்னை, ஜூன் 6 மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கொரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு, முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் செல்வி நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் […]
Continue reading …சென்னை, ஜூன் 4 மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து பன்முக நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். முதல்வர் ஆணைக்கிணங்க, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் […]
Continue reading …சென்னை, ஜூன் 4 உலக சுற்றுச்சூழல் நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்தியத் தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இனியாவது இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனிதகுலத்தை காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும். உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் […]
Continue reading …சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் ஜூன் 30ம் தேதி வரை வேலைக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் 50% பணிக்கு செல்ல திரும்பி உள்ளனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வது சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு இம்மாதம் 30ஆம் […]
Continue reading …தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ மண்டல சிறப்பு வானிலை மையம்/ இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு ஆகியன பின்வரும் தகவல்களை அளித்துள்ளன: கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் “நிசர்கா” புயல், கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. ஜூன் 3, 2020, இன்று காலை இந்திய நேரப்படி, 08-30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடலில் 17.6°N அட்சரேகை மற்றும் 72.3°E தீர்க்கரேகை அருகே, அலிபாக்கிலிருந்து ( மகாராஷ்டிரா) தெற்கு […]
Continue reading …தளபதி 65 படத்தை முருகதாஸ், தளபதி 66 படம் மகிழ்திருமேனி அல்லது பாண்டிராஜ், தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் என வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கிடையில் தளபதி விஜய்யிடம் பிரபல நடிகர் ஒருவர் கதை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும் அந்த படத்தில் நடிக்க சிறிது தயக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல […]
Continue reading …சென்னை, ஜூன் 3 ஐரோப்பாவின் ஸ்காட்லாந்து நாட்டில் சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 48 இந்தியர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். ஸ்காட்லாந்துக்கும் லண்டனுக்கும் இடையில் சுற்றுலா பயணிகளை […]
Continue reading …அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அவர் இயக்கும் படத்தின் நாயகியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பூஜா பத்ரா. பாலிவுட் சினிமாக்களில் நடிக்க வந்த புதிதிலேயே கவர்ச்சியில் கிறங்கடித்து பல ரசிகர்களை தன் வசம் சேர்த்தவர் பூஜா பத்ரா. தென்னிந்திய மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார், 90 காலகட்டங்களில் அதிக கவர்ச்சி காட்டும் நடிகையாக வலம் வந்ததால் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் உலக அழகி ரேஞ்சுக்கு புகழ் போதையில் சுற்றி வந்தார் […]
Continue reading …சென்னை, ஜூன் 1 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடிக் கட்டடமாக அமையவுள்ளது. இப்பூங்கா நவீன […]
Continue reading …